சிக்கலுக்கு எண்ட் கார்டு போட்டாச்சு..! புதுச்சேரி ராஜ்யசபா பாஜக எம்பி வேட்பாளர் அறிவிப்பு

By manimegalai aFirst Published Sep 21, 2021, 9:12 PM IST
Highlights

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்யசபா எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளராக செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்யசபா எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளராக செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணி சட்டசபை தேர்தலில் 16 இடங்களை வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இருக்கும் நிலையில் அரியணை ஏறிய நாள் முதல் இரு கட்சிகளுக்கும் பல்வேறு தருணங்களில் மோதல் எழுந்து கொண்டே வந்தது.

தற்போது அதே மோதல் மற்றும் குழப்பம் புதுச்சேரி ராஜ்யசபா எம்பி வேட்பாளர் தேர்விலும் வந்தது. தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பல நாட்களாக இரு கட்சிகள் இடையே பெரும் குழப்பம் நீடித்தது.

முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள் ராஜ்யசபா எம்பி தேர்தலில் பாஜக களம் காண வேண்டும் என்ற விருப்பத்தை கடிதமாக தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்காத ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக பாஜக மேலிடம் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது.பொறுப்பு ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசையை இது சம்பந்தமாக முதலமைச்சர் ரங்கசாமி சென்று சந்தித்துவிட்டு வந்தது கூட இந்த பிரச்னைக்காக தான் என்றும் பேசப்பட்டது.

இப்படிப்பட்ட பரப்பரப்பான சூழலில் புதுச்சேரி ராஜ்யசபா எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்துள்ளது. பாஜக முன்னாள் எம்எல்ஏ செல்வகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதற்கான அறிவிப்பை பாஜக பொது செயலாளர் அருண் சிங் செய்தி குறிப்பு ஒன்றின் மூலம் வெளியிட்டு உள்ளார். அவரது அறிவிப்பை தொடர்ந்து பாஜக, என்ஆர் காங்கிரஸ் இடையே இருந்து வந்த அரசியல் குழப்பம் பிளஸ் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

click me!