நிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து..!! அவர் வகுப்பு தேழியா என கேள்வி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2019, 1:59 PM IST
Highlights

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்களிடம் அரசு மறைக்க  முயற்ச்சி செய்வதுடன்,  அது சீரழிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது  என்பதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்க மறுக்கிறார் இது எனக்கு வியப்பாக உள்ளது என்ற அவர், அதை சீர்படுத்த அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது பேரதிர்ச்சியாக உள்ளது என்றார். 
 
நிர்மலா சீதாராமன் நடந்து கொள்வதை பார்த்தால் அவர்  என்னுடைய வகுப்பு தோழிதானா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது என சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கவாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு நோபல் பரிசு பெற்றார்,  அது குறித்தும் இந்திய பொருளாதாரம் குறித்தும்  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அதில் பேசிய அவர், எப்போதும் இல்லாத அளவிற்கு  இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது.  மேலும் அதை மேம்படுத்த  மத்திய அரசும் அதன் அமைச்சரும்  எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலை அளிக்கிறது என்றார்.

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்களிடம் அரசு மறைக்க  முயற்ச்சி செய்வதுடன், அது சீரழிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது  என்பதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்க மறுக்கிறார் இது எனக்கு வியப்பாக உள்ளது என்ற அவர், அதை சீர்படுத்த அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது பேரதிர்ச்சியாக உள்ளது என்றார்.

இவற்றையெல்லாம் பொருட்படுத்ததுபோல் அவர் இருப்பதைப் பார்த்தால் அவர் என்னுடன்  படித்தவர்தானா என எனக்கு  சந்தேகம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.  டெல்லியில் உள்ள   ஜெஎன்யூ கல்வி நிறுவனத்தில் இருவரும் படித்தபோதே பேட்டியாளர்களாக இருந்தோம், ஆனால் அவருடன் ஆழ்ந்த நட்பு இல்லை என்று அபிஜித் கருத்து பகிர்ந்துள்ளார். 

click me!