மதிப்பு, மரியாதை இல்லை... ஓ.பி.எஸ் ஆதரவாளர் அதிமுகவில் இருந்து விலகல்..!

Published : Jun 16, 2021, 05:27 PM IST
மதிப்பு, மரியாதை இல்லை... ஓ.பி.எஸ் ஆதரவாளர் அதிமுகவில் இருந்து விலகல்..!

சுருக்கம்

ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளருமான அஸ்பயர் சுவாமிநாதன் கட்சியிலிருந்து விலகுதவாக அறிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளருமான அஸ்பயர் சுவாமிநாதன் கட்சியிலிருந்து விலகுதவாக அறிவித்துள்ளார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர், ‘’அதிமுகவில், நல்ல தொழில்முறையாளர்கள் மற்றும் திறமையாளர்களுக்கு இனியும் மதிப்பு இல்லை. எதிர் காலம் குறித்து சிந்தனை, எதை நோக்கி போகிறோம் என்ற இலக்கு எதுவுமே இல்லாமல் கட்சி இருப்பது இன்னும் மோசம். என்னை கட்சி பதவியிலிருந்து நீக்கிவிடுமாறு, கடந்த வாரமே, தலைமைக்கு சொல்லிவிட்டேன். இப்போது நான், அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிடுகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

அதிமுக ஐ.டி அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அஸ்பயர் சாமிநாதன். ஆனால் 2016ம் ஆண்டு அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு சிங்கை ராமச்சந்திரனை நியமித்தார் ஜெயலலிதா. அஸ்பயர் சுவாமிநாதன், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக அறியப்படுபவர்.

PREV
click me!

Recommended Stories

வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!
விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!