தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை புறக்கணித்த தமிழக அரசு - முதலமைச்சர் விழாவில் அதிர்ச்சி

First Published Jun 29, 2017, 10:26 AM IST
Highlights
no tamil anthem in government function


ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு விழா, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்காமலேயே விழா தொடங்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் 505 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

விழாவில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், காமராஜ், வேலுமணி, விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், பெஞ்சமின், கேசி வீரமணி ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

விழாவி தொடங்கியவுடன் 340 உதவி மருத்துவர்களுக்கும், 165 சிறப்பு உதவி மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
முதலமைச்சர் பங்குபெறும் அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகே, விழா தொடங்கும். ஆனால், இன்று பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலேயே விழா தொடங்கியது.

இது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதுவும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து  பாடாதது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் பாடாதது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

click me!