"பால் கலப்பட விவகாரம்... ராஜேந்திர பாலாஜி தற்கொலை செய்வாரா?" - ஸ்டாலின் கேள்வி!

First Published Jun 29, 2017, 9:19 AM IST
Highlights
stalin question rajendra balaji

தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதனை நிரூபிக்க என்ன செய்யப்போகிறார்? என கேள்வி எழுப்பிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சனையில் தூக்கில் தொங்கவும் தயாராக இருப்பதாக அமைச்சர் கூறியதை நினைவு படுத்தினார்.

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனை பார்வையிட்ட ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, குளம் தூர்வாரும் பணியை தமிழக அரசு தான் தொடங்கியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளம்பரம் தேடுவதாக குறிப்பிட்டார். ஆனால் உண்மையிலேயே  குளங்களில் தூர்வாரும் பணியை தி.மு.க., தான் முதலில் தொடங்கியது என குறிப்பிட்டார்.

குட்கா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்றும் கேள்வி எழுப்பப்படும் என்றும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில்  வழக்கும் தொடரப்படும் என தெரிவித்தார்.

பால் விற்பனை விவகாரத்தில் இரண்டு நிறுவனங்களை குற்றம் சாட்டி இருந்தார். இரண்டு நிறுவனங்களும் மறுத்துவிட்டன. இந்த விவகாரத்தில் வைகை செல்வனுடன் மோதலில் ஈடுபட்டதால் கட்சி மானம் தான் கப்பலேறியது என ஸ்டாலின் கிண்டல் செய்தார்.

click me!