பன்னீரை விட பத்தாயிரம் மடங்கு துரோகி எடப்பாடி: சிறையில் சசி குதித்துக் கொந்தளித்தது ஏன்?!

 
Published : Jun 28, 2017, 09:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
பன்னீரை விட பத்தாயிரம் மடங்கு துரோகி எடப்பாடி: சிறையில் சசி குதித்துக் கொந்தளித்தது ஏன்?!

சுருக்கம்

sasikala angry on edappadi palanisamy activities

எதிர்கட்சி தலைவர்களை எதிரிகளாக பாவித்து நடத்துவதே அ.தி.மு.க.வின் ஆகப்பெரிய பலம் என்று ஜெயலலிதா நம்பினார். அவரது சமாதியில் துவப்பட்ட ரோஜா இதழ்கள் சருகாகும் முன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக வந்தமர்ந்த சசிகலாவும் அதையே ஃபாலோ செய்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றிட சசிகலா வைத்த ஒரே குற்றச்சாட்டே இதை தழுவித்தானே இருந்தது. ’சட்டசபையில் ஸ்டாலின் பன்னீரை பார்த்து சிரிக்கிறார், பதிலுக்கு பன்னீரும் சிரிக்கிறார். இதுதான் அம்மாவுக்கு இவர் காட்டும் விசுவாசாமா?’ என போட்டாரே ஒரு போடு. இது போதாதா ’எதிர்கட்சிகளெல்லாமே எதிரிக்கட்சிகள்தான்!’ என்பதுதான் அ.தி.மு.க.வின் அரசியல் சித்தாந்தம் என்பதை புரிந்து கொள்ள!

ஆக இப்படியொரு பாமரத்தனமான கொள்கையுடன் ஒரு பரந்து விரிந்த அரசியல் கட்சியை நடத்த ஆரம்பித்த சசிகலா, சிறை செல்லும் முன் தன் நம்பிக்கைக்கு உரிய நபராக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு போனார். அதன் பிறகு சூழ்நிலைகள் தலைகீழாக சுழல துவங்கியது தமிழகம் கண்டு கொண்டிருக்கும் காட்சி.  சசியும், தினகரனும் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதாக மூத்த அமைச்சர்கள் அறிவித்ததை மெளன முகம் காட்டி ஏற்றுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. தலைமை கழகத்திலிருந்து சசியின் படம் அகற்றப்பட்டதை கூட அவர் திட்டவும் இல்லை, திருப்பி வைக்க சொல்லவும் இல்லை. வெற்றிவேல் பாணியில் சொல்வதானால் ‘இன்னொரு நரசிம்மராவ்’ ஆகத்தான் இருக்கிறார் எடப்பாடி.

இவ்வளவு நடந்தும் கூட சசிக்கு எடப்பாடியார் மீது ஒரு நம்பிக்கை கீற்று இருக்கத்தான் செய்தது. தன்னை சந்திக்க வரும் தம்பிதுரை, தினகரன் மற்றும் திவாகரனிடம் ‘வேலுமணியும், தங்கமணியும், சிவபதியும், ஜெயக்குமாரும் இந்த சசிகலாவின் துரோகிகள் என்று வெளிப்படையாக முத்திரை குத்திக் கொண்டுள்ளனர். ஆனால் எடப்பாடியார் மீது இப்பவும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது  மெளனமே எனது நம்பிக்கைக்கு ஆதாரம்.

நிச்சயம் எனக்கு எதிராக அவர் செயல்படவும் மாட்டார். விசுவாத்தை கைவிடவும் மாட்டார். அவரைப்போல் செங்கோட்டையன், சபாநாயகர், பொள்ளாச்சியார் உள்ளிட்ட இன்னும் சிலரையும் நான் நம்புகிறேன். அம்மாவுடைய கடந்த ஆட்சியில பதவியிழந்த செங்கோட்டையன் மீண்டும் பதவிக்கு வரமுடியாம போனதுக்கு என்னோட கோபமும் ஒரு காரணம். ஆனா அதை மனசுல ஏத்திக்காம இப்போ எனக்கு எதிரா எதையும் செய்யாம இருக்கிறார். எடப்பாடியார் உள்ளிட்ட இவங்களை நான் இப்பவும் நம்புறேன்.” என்று தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்.

ஆனால் கடந்த 23_ம் தேதி பேரவையில் நடந்த நிகழ்வின் முழு ரிப்போர்ட் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் சசிகலாவின் கவனத்துக்கு சிறைக்குள் சென்றது. அதை வாசித்துப் பார்த்தவர் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று ’எடப்பாடி செய்த வேலையா இது? பன்னீரை விட பத்தாயிரம் மடங்கு  துரோகம் செய்துவிட்டாரே. சபாநாயகர் தானும் சளைத்தவரில்லை என்று நிரூபித்துவிட்டார். இனி இந்த கட்சியின் தன்மானத்தை அந்த கடவுளே நினைத்தாலும் காப்பாத்த முடியாது. துரோகம், துரோகம், பச்சை துரோகம்.” என்று ஆவேசத்தில் கொந்தளித்திருக்கிறார் சசி.

அப்படி என்னதான் நடந்தது ஜூன் 23ல்?

அது இதுதான். கடந்த பிப் 18_ம் தேதியன்று அ.தி.மு.க. அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது ஏற்பட்ட களேபரத்தின் போது தி.மு.க.வின் சில எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி நடந்தனர். சபாநாயகர் தனபாலின் இருக்கையை முற்றுகையிட்டவர்கள் அவரைப் பேசவிடாமல் தடுத்ததோடு அவரை கையை பிடித்து இழுத்தும், சட்டையை பிடித்து இழுத்தும்,  காலியாக  இருந்த அவரது நாற்காலியில் அவர்கள் அமர்ந்தும் அழிச்சாட்டியம் செய்தனர். சட்டசபையின் மாண்பும், ஜனநாயகமும், சபாநாயகர் மீது அவையினர் வைக்க வேண்டிய மரியாதையும் கரிய நிறை மையால் அழித்து அவமதிக்கப்பட்ட நாள் அது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிமைக்குழு விசாரணை நடந்தது. இதன் இறுதியில் அட்டூழியம் செய்து சபாநாயகரையும், சபையையும் அவமதித்த ஏழு தி.மு.க. உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை பற்றி அறிக்கை தயார் செய்தார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். அதனடிப்படையில் அந்த ஏழு உறுப்பினர்கள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை உறுதியாக இருந்தது. அதன்படி ஏழு உறுப்பினர்களும் ஆறு மாத காலத்துக்கு சபை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். இதனால் அவர்களுக்கு எம்.எல்.ஏ.வுக்கான எந்த சலுகையும் கிடைத்திருக்காது. இந்த தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அது சட்டமன்ற வரலாற்றில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய ஒழுங்கீன பெயரை தந்திருக்கும்.

இதை முன்கூட்டியே ஸ்மெல் செய்துவிட்ட ஸ்டாலின், இதை தடுத்திடும் மூவ்களில் இறங்கினார். தி.மு.க.வின் சீனியர் பிரமுகர்களை முதலமைச்சரையும், சபாநாயகரையும் சந்தித்து பேச அனுப்பினார். இதை தொடர்ந்து 21_ம் தேதியன்று சபாநாயகர் தனபாலை சந்தித்த தி.மு.க. உறுப்பினர்கள் “நடந்த சம்பவத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனிமேல் இப்படி நடக்க மாட்டோம்.” என்று எழுதிக் கொடுத்து மன்னிப்பு கேட்டனர். இதை கடந்த 23_ம் தேதியன்று சபையில் வெளிப்படையாக சொன்னதோடு ‘இதை இத்துடன் விட்டுவிடலாம்.” என்று அறிவித்தார் சபாநாயகர். தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை எனும் தீர்மானத்தை அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஆக்சுவலி அ.தி.மு.க. இவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டது அரசியல் நாகரிக உச்சம். எடப்பாடியாரும், சபாநாயகரும் நினைத்திருந்தால் இந்த மன்னிப்பை ஏற்காமல் விட்டு தி.மு.க.வை திணறடித்திருக்கலாம். அக்கட்சியின் ஏழு உறுப்பினர்களை சபைக்கு வரவிடாமல் செய்வதன் மூலம் அரசுக்கு எதிராக தி.மு.க. எடுக்கும் செயல்பாடுகளின் வீரியத்தை எண்ணிக்கை அடிப்படையில் குறைத்திருக்கலாம். சொல்லப்போனால் பல விதங்களில் இந்த சஸ்பெண்டானது ஆளுங்கட்சிக்கு கை கொடுத்திருக்கும். ஆனால் இதை பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட்டது அ.தி.மு.க.

இந்த விவகாரம் 23_ம் தேதியன்றே சசிக்கு வாய்மொழியாக சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில்தான் தி.மு.க. அன்று நடந்த விதம், அவர்கள் மீது துணை சபாநாயகர் எடுக்க முடிவெடுத்த கடும் நடவடிக்கைகளின் முழு விபரம், அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்கள் மன்றத்தில் தி.மு.க. எந்தளவுக்கு அவமானப்பட்டிருக்கும் என்கிற புள்ளிவிபரங்கள், அவை அ.தி.மு.க.வுக்கு எந்த விதத்திலெல்லாம் சாதகமாக அமைந்திருக்கும் என்கிற தரவுகள் என அத்தனையும் பக்கா ரிப்போர்ட்டாக சசியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை வாசித்துவிட்டுதான் சசி குய்யோ முறையோ என குதித்திருக்கிறார். ‘யாரைக்கேட்டு எடப்பாடி இப்படியொரு முடிவெடுத்து தி.மு.க.வுக்கு அணுசரனை காட்டினார்?” என்று கேட்டவர் பின் துரோகிகள் பட்டியலில் எடப்பாடியாரையும் சேர்த்தார்.

இந்த விவகாரத்தில் சசி இவ்வளவு டென்ஷனான விஷயம் எடப்பாடியாரின் காதுகளுக்கு பகிரப்பட்டதாம். அதற்கும் ஜூனியர் நரசிம்மராவ்வாகவே இருந்துவிட்டார்.

ஸ்டாலினை பார்த்து சிரித்ததற்கே ஒரு முதல்வரை பதவி விலக வைத்தார் சசி. ஆனால் இப்போதோ முடக்கப்பட வேண்டிய தி.மு.க.வை மன்னித்து ஆட விட்டிருக்கிறது எடப்பாடி அ.தி.மு.க. இதை கேள்விப்பட்டு தனக்கு பி.பி. ஏற்றிக் கொண்டதை தவிர வேறேதும் சசியால் செய்ய முடியவில்லை.

இதற்குப் பெயர்தான் விதி!

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!