
தினகரன் ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டிருப்பது போல் அதிமுக.,வில் ஸ்லீப்பர் செல்கள் என்று யாரும் இல்லையே என்று கூறினார் அதிமுக., எம்.பி. மைத்ரேயன்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அவருடன் அதிமுக., எம்.பி., மைத்ரேயன், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் செல்கின்றனர். இதற்காக இன்று இரவு தில்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். நாளை காலை 11 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளனர்.
இந்நிலையில், தில்லி செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்தார் மைத்ரேயன். அப்போது அவர், அதிமுக.,வில் ஸ்லீப்பர் செல்கள் என்று யாரும் இல்லை என்று கூறினார். மேலும், “ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை மீட்பு இதுவே எங்கள் இலட்சியம். நவம்பர் 10ம் தேதி இரட்டை இலை எங்கள் அணிக்கே கிடைக்கும். எங்கள் தரப்பு விஷயங்களை நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுளோம்” எனக் கூறினார்.