இந்தியான்னா இந்தியாதான் …. இங்குள்ள  குழந்தைகளிடம் மத வேறுபாடே இல்லையாம்… அமெரிக்க ஆய்வில் ஆச்சர்யத் தகவல்….

 
Published : Jun 16, 2018, 08:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
இந்தியான்னா இந்தியாதான் …. இங்குள்ள  குழந்தைகளிடம் மத வேறுபாடே இல்லையாம்… அமெரிக்க ஆய்வில் ஆச்சர்யத் தகவல்….

சுருக்கம்

No religioan variation in Indain childrens

இந்தியாவில் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், பவுத்தம், சமணம், சீக்கியம் என்று பல்வேறு மதங்கள் இருந்தாலும், இந்தியக் குழந்தைகள் தங்களுக்குள் மதவேறுபாடு கொள்வதில்லை என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘சாண்ட் க்ரூஸ்’ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய நாட்டின் சித்தாந்தமே வேற்றுமையில் ஒற்றுமை என்பதே. அத்தைகைய ஜனநாயக நாட்டில் அவ்வப்பொழுது மா கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. சில மத தீவிரவாத அமைப்புகள் கலவரத்தைத் தூண்டிவிட்டு வருகின்றன.

ஆனால் வளர்ந்த பெரியவர்களுக்குத்தான் மதம் பிடித்திருக்கிறது, தாங்கள் அந்த வேறுபாடுகளை மறந்து வாழ்கிறோம் என இந்திய குழந்தைகள் நிரூபித்துள்ளனர்.

பொதுவாக இந்தியக் குழந்தைகள் தங்கள் மதத்திற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர்; ஆனாலும் அவர்கள் பிற மதத்திற்கு மதிப்பளித்து அவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கின்றனர்; தங்களது மதத்தை பின்பற்றினாலும் பிறமதக் கருத்துக்களை அவர்கள் இழிவு படுத்துவதில்லை என அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘சாண்ட் க்ரூஸ்’ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகளின் மனத்தில் மதப்பாகுபாடு பிறரால் புகுத்தப்படாதவரை, அவர்கள் இப்படியே தான் இருப்பர்; அப்படி மட்டும் நடந்தால் இந்தியாவில் எதிர்வரும் காலத்தில் மதக்கலவரங்கள் குறைய வாய்ப்பாக இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில்தான் மதக்கலவரங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன; ஆனாலும் அங்கிருக்கும் குழந்தைகளின் மனத்தில், மதங்களை பின் பற்றுவது குறித்து தெளிவான ஒரு சிந்தனை இருக்கிறது என்பது தங்களை ஆச்சரியப்படுத்தி விட்டதாக ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களும் கூறியிருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்