ஒரு தொகுதிக் கூட மிஸ் ஆயிடக் கூடாது... 18 தொகுதியையும் பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கணும்... தீர்ப்புக்குப் பின் உற்சாகமான எடப்பாடி!

 
Published : Jun 15, 2018, 03:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
ஒரு தொகுதிக் கூட மிஸ் ஆயிடக் கூடாது... 18 தொகுதியையும் பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கணும்... தீர்ப்புக்குப் பின் உற்சாகமான எடப்பாடி!

சுருக்கம்

He is excited and excited by election

தினகரன் முழுசாக நம்பியிருந்த வழக்கின் தீர்ப்பு கைவிரித்து விட்டது ஐகோர்ட். தீர்ப்பு எப்படியும் நமக்கு சாதகமாகத்தான் வரும் என நம்பிய தினகரனின் ஆதரவாளர்கள்  தினகரன் வீட்டுக்கு அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை 10 மணியிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே வீட்டுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.  

‘எனக்கு நம்பிக்கை இருக்கு. நிச்சயம் தீர்ப்பு நமக்கு சாதகமாகத்தான் வரும். அதனால் நீங்க யாரும் கவலைப்படாமல் தைரியமாக இருங்க. உங்களுக்கு என்ன விலை கொடுத்து இழுக்கவும் ஆளும் தரப்பு தயாராக இருக்கு. தயவு செய்து அந்த தப்பை யாரும் பண்ணிடாதீங்க. அப்படி நீங்கள் மனசு மாறி நடந்தால், இவ்வளவு நாள் நாம எல்லோரும் பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாமல் போயிடும். நீங்கதான் என்னோட சொத்து. உங்களை நம்பித்தான் நானும் தனியாக கட்சி தொடங்கியிருக்கேன்’ என்று உருக்கமாக பேசினாராம் தினகரன்.

இதனையடுத்து, தினகரன் எந்த அளவுக்கு இந்த தீர்ப்பை எதிர்பார்த்து இருந்ததைப்போலவே, எடப்பாடி டீம் காலையிலிருந்தே தீர்ப்புக்காக காத்திருந்தது. தீர்ப்பு தமக்கு எதிராக வந்தால் என்ன செய்வது?  என எடப்பாடியார் சில அமைச்சர்களை நேரில் அழைத்து தீர்ப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

தீர்ப்புக்குப் பிறகு அமைச்சர்களிடம், ‘தலைமை நீதிபதியின் தீர்ப்பு நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. இனி மூன்றாவதா ஒரு நீதிபதி நியமித்தாலும் அவரது தீர்ப்பும் நிச்சயம் தலைமை நீதிபதியைப் பின்பற்றித்தான் இருக்கும். அதனால், இப்போதைக்கு நாம எதுக்கும் கவலைப்பட தேவையில்லை. இப்போதைக்கு நம் கவலை எல்லாமே இந்த 18 தொகுதிக்கு வரப் போகும் இடைத் தேர்தலில் எப்படி ஜெயிக்கப் போறோம் என்பதுதான். இனி அதைப் பற்றி மட்டும்தான் யோசிக்கணும்...’ ஒரு தொகுதிக் கூட மிஸ் ஆயிடக் கூடாது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, எல்லோரும் பொறுப்ப எடுத்து 18 தொகுதியையும் வின் பண்ணிடனும், என்று உற்சாகமாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி” 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்