
தம்பி, நம்ம கேப்டன் ரொம்ப நாளைக்கு அப்புறமா வெளியில தலை காட்டுறாரு, அதனால் நீங்க இந்த மாநாட்டை சிறப்பா செஞ்சிடுங்க என தேமுதிக தலைமை கழக நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரனுடன் பேசியிருக்கிறார்கள்.
உடல் நல குறைபாடு என்று பல பிரச்னைகளால் தீவிர அரசியலுக்கு லீவு விட்டிருந்தார் விஜயகாந்த். அதிலும் கடந்த சில மாதங்களாக பர்ஷனல் மற்றும் பாலிடிக்ஸ் சைடில் அநியாயத்துக்கு சைலண்டாகி கிடந்த நிலையில், இதோ மாநாடு வடிவில் தன் கட்சியினருக்கு பூஸ்ட் கொடுக்க தாறுமாறாக தயாராகிவிட்டார் கேப்டன்.
சில மாதங்களுக்கு முன்புதான் மெல்ல வெளியே தலை காட்ட துவங்கினார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்ற விஜயகாந்த், அந்த மாவட்டத்திலுள்ள முக்கிய பிரச்னைகளை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துவதை தனது ஸ்டைலாக வைத்திருக்கிறார். சக்ஸஸ் ஆகிறதோ இல்லையோ ஆனால், அதை சிறப்பாக நடத்தி முடிப்பதில் கில்லி என்று தான் சொல்லன்னு.
தமிழகத்தில் அரசியல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆமாம், திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக என ஆளாளுக்கு பொதுக்கூட்டம் என தமிழகம் முழுவது ரைண்டடித்தனர். வேலையில் சைலன்ட்டாக இருந்த கேப்டன் மட்டும் சும்மா இருப்பாரா? இதோ? அவரும் அடுத்த கட்டத்திற்கு செல்ல காய் நகர்த்தி வருகிறார்.
எந்த மாவட்டத்தில் நடத்தலாம்? எப்போ நடத்தலாம் என ப்ளான் போட்டனர். அப்போது மாநாட்டுக்கான நாள் செப்டம்பர் 11 ஆம் தேதி குறித்துவிட்டனர். ஆனால் இந்த மாநாட்டை எந்த நிர்வாகியை நடத்த சொல்லலாம்? என்று விஜயகாந்த் குழம்பியபோது கடந்த ஆண்டு மாட்டுவண்டி கட்டிக்கிட்டு, ‘சமீபத்துல நாம பண்ணுன ஆர்பாட்டங்கள்ளேயே உடுமலையில நடந்த ஆனமலை - நல்லாறு திட்ட போராட்டம்தான் சூப்பர் இருந்துச்சு. அந்த போராட்டத்த பிரமாண்டமா நடத்திக் காட்டின திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் அந்த சின்ன பையன் முத்து வெங்கடேஸ்வரன் தான் இந்த எழுச்சி மாநாடுக்கும் ரைட் சாய்ஸ்!’என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார் பிரேமலதா.
பிரேமலதா சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த விஜயகாந்த் மறுப்பே சொல்லாமல் கன்னசைத்திருக்கிறார். இருந்தாலும் தம்பிய கூப்பிட்டு மாநாட்டை நடத்த உங்களுக்கு விருப்பமான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கோ என சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து, தலைமைக் கழக நிர்வாகிகள் மூலமாக இந்த தகவலை முத்துவெங்கடேஸ்வரனுக்கு சொல்லப்பட்டதாம், அப்போது, நம்ம கேப்டன் ரொம்ப நாளைக்கு அப்புறமா வெளியில தலை காட்டுறாரு, அதனால் நீங்க இந்த மாநாட்டை சிறப்பாக செய்தாகணும், நீங்க நடத்திறத ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் என ஒட்டுமொத்தமா அலறணும், நீங்க ரெடி பண்ண உடுமலையில நடந்த ஆனமலை - நல்லாறு திட்ட போராட்டம் தான் சூப்பர் இருந்துச்சுன்னு நம்ம கேப்டனும் அண்ணியாரும் சொன்னாங்க. அதனால நீங்க தான் பண்ணனும் என சொன்னார்களாம். இதனையடுத்து, கூடிய விரைவில் மாநாட்டை பிரமாண்டமாய் நடத்திட திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரவுண்டு தேட துவங்கிவிட்டார் முத்துவெங்கடேஸ்வரன்.
இதக்கு முன், மாநாட்டிற்கு இன்னும் இரண்டு மாதம் இடைவேளை உள்ள நிலையில், குரல் வள மேம்பாட்டிற்காக அமெரிக்கா செல்லும் விஜயகாந்த். சிகிச்சை முடிந்து திரும்பியதும், திருப்பூர் மாநாட்டில் பழைய கேப்டன் பிரபாகரனாக கர்ஜிப்பார் என கழக நிர்வாகிகளும், தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாங்க கேப்டன்... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்!