ராமதாசை வீழ்த்தியே தீர வேண்டும் … தமிழவ வாழ்வுரிமைக்கட்சியில் இணைந்து சபதம் போட்ட காடுவெட்டி குருவின் சகோதரி !!

By Selvanayagam PFirst Published Apr 1, 2019, 7:21 AM IST
Highlights

காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி ஆகியோர்  நேற்று திடீரென வேல முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். இதில் பாமகவை வீழ்த்தியே தீருவோம் என அவர்கள் சபதம் ஏற்றனர்.

சென்னை அரும்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் கட்சியில் இணைந்தனர். 

இந்தக் கூட்டதில் பேசிய  வேல்முருகன்,  ராமதாசைப் பொறுத்தவரை ஓட்டுக்கும், நோட்டுக்கும் தான் முன்னுரிமை கொடுப்பார் என்றும் வன்னிய மக்களின் நலன் குறித்தெல்லாம் அவருக்கு எந்த கவலையும் இல்லை என தெரிவித்தார்.

11 ஆண்டு காலாம் மத்திய அமைச்சரவையில் இருந்த அன்புமணி, ஏ.கே.மூர்த்தி போன்றோர் வன்னிய மக்களின் இட ஒதுக்கீடு குறித்து வாயைத் திறந்திருப்பார்களா ? என கேள்வி எழுப்பினார்.

நான் தேவையில்லாத வாக்குறுதிகளை தர மாட்டேன் ஆனால் செய்ய வேண்டியதைச் செய்வேன் எனவும் தெரிவித்தார். காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி  முத்துலட்சுமி  ஆகிய இருவர் மீதும் ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொள்வது தனது கடமை என்றும் பேசினார். 

மேலும், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை தனது சகோதரனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எதிராக ராமதாஸ் மற்றும் ஜிகே மணி ஆகியோர் இழைத்த அநீதிக்கு பாடம் புகட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார் என்றும் கூறினார். 

இந்த தேர்தலுடன் திமுக-வின் சகாப்தம் முடிந்து விடும்... முதல்வர் பழனிசாமி பேச்சு காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்திருப்பது, நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு வாக்குவங்கியை பாதிக்கும் என கூறப்படுகிறது. ஏ

ற்கனவே, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமகவில் இருந்து நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

click me!