துரைமுருகன் சும்மா பயமுறுத்துகிறார் … தண்ணீர் கொண்டு செல்ல வேலூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கல… வேலுமணி அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jul 12, 2019, 10:53 PM IST
Highlights

ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரிப்பு செய்தபின், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தெரிவித்த அமைச்சர் வேலுமணி , இது தொடர்பாக துரை முருகன் மக்களை  பயமுறுத்துகிறார் எனற தெரிவித்தார்.
 

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கி விட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளாருமான துரை முருகன், வேலூரில் இருந்து தண்ணீர் கொண்டு போனால்  போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையிலையில் சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையே பணிகள் நிறைவடைந்த நிலையில் 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் சென்னை வில்லிவாக்கத்துக்கு 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது. சென்னை மக்களின் தாகம் தீர்க்க வந்த முதல் குடிநீர் ரெயில் என்பதால் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரித்து விநியோகிக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 
அதன்பின்னர், அங்கிருந்து சுத்திகரிப்பு செய்த பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் நீர் கொண்டுவர வேலூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேலூர் மக்களின் தேவைக்கு போக மீதமுள்ள நீர்தான் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது என தெரிவித்தார்.

click me!