கரெக்டான டைம்ல….கரெக்ட்டான புத்தகம் வந்திருக்கு … தமிழாற்றுப்படை நூல் குறித்து ஸ்டாலின் பெருமிதம் !!

By Selvanayagam PFirst Published Jul 12, 2019, 10:20 PM IST
Highlights

சென்னையில் நடந்த வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மிகவும் சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது என்றார்.
 

சென்னை தேனாம்பேட்டையில் கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். ,தைத் தொடர்ந்து ஸ்டாலின் தமிழாற்றுப்படை புத்தகம் குறித்து பேசினார்.:

அப்போது தமிழின் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. நாம் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். மிகச்சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது.


தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டவர் வைரமுத்து, திரைத்துறையில் அவரை விட அதிக விருது பெற்றவர் யாரும் இல்லை .

வடமொழி ஆதிக்கத்தை புகுத்த நினைக்கும் இந்த நிலையில், வைரமுத்து தமிழாற்றுப்படை நூலை தந்துள்ளார் என பாராட்டிப் பேசினார்.

இதேபோல் விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசுகையில், வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் 21-ம் நூற்றாண்டின் இரட்டை காப்பியங்கள். நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும். வைரமுத்து எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றார்.

புத்தகத்தை பெற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வரலாற்றில் நாகரிகத்தின் அடையாளம். சிலர் தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் தமிழில் பேசுவதும், எழுதுவதும் இல்லை, இது தமிழ் மொழிக்கு அழிவை தரும் என்றார்.

click me!