எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை யாரும் கட்டிவைக்கவில்லை.. சட்டசபையை அதிர வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்.

Published : Jun 24, 2021, 12:12 PM ISTUpdated : Jun 24, 2021, 12:13 PM IST
எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை யாரும் கட்டிவைக்கவில்லை.. சட்டசபையை அதிர வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்.

சுருக்கம்

ஆளுனர் உரை வெறும் ட்ரெய்லர் தான் மற்றவற்றை பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். தமிழக  16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆளுனர் உரை வெறும் ட்ரெய்லர் தான் மற்றவற்றை பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்

தமிழக  16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.  கடந்த 21ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது, ஆளுனர் உரையின்போது திமுக அரசின் நடவடிக்கைகளை பாராட்டி ஆளுநர் உரையை வாசித்தார். அதை எதிர் கட்சிகளான பாஜக, பாமக, அதிமுக போன்ற கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை திமுக உறுப்பினர் உதய சூரியன்  முன்மொழிந்தார். 

அதில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள்ஆளுநர் உரைமீது தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் உரையாற்றி வருகிறார். அதில்,  திமுக என்பது அடக்கமுடியாத யானை,  நான்கு கால்கள்தான் யானையின் பலம், அது போல திமுக என்ற யானைக்கு சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப்பற்று ஆகியவை திமுகவின் கால்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் வேண்டாம். என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் மேலும் என்னை உழைக்க உந்துகின்றன. ஆளுநர் உரை என்பது வெறும் டிரெய்லர் தான், மீதியை பொறுத்திருந்து பாருங்கள். ஆளுநர் உரையில் அரசின் ஓராண்டு கால செயல்திட்டங்கள் மட்டுமே இடம்பெறும், 5 ஆண்டு காலத்தில் செயல்படுத்த உள்ள அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிடமுடியாது.

எங்களது பணிகள், வாக்களித்தவர்கள் எங்களுக்கு வாக்களித்ததற்காக மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க தவறி விட்டோமோ என வருந்தும் வகையிலும் இருக்கும். முதல்-அமைச்சராக இருந்தபோது கொரோனா தடுப்பு பணிகளை செய்யக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமியின் கையையும் யாரும் கட்டிப் போடவில்லை, திமுக பதவி ஏற்றபோது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. எதுவுமே இல்லை இல்லை என்ற நிலைதான் இருந்தது, தற்போது இல்லை இல்லை என்ற நிலைமையை இல்லாமல் போயுள்ளது. அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகள் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என கூறினார். 

 

PREV
click me!

Recommended Stories

நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!