திமுக யாராலும் அடக்க முடியாத யானை... பிளிறும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published : Jun 24, 2021, 11:56 AM IST
திமுக யாராலும் அடக்க முடியாத யானை... பிளிறும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

 திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை. யாராலும் அடக்க முடியாத யானை என அவர் தெரிவித்தார்.  

ஆளுநர் உரை ட்ரெயிலர் தான் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து, நூறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் எனக்கூறினார்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சியே தான் என குறிப்பிட்ட ஸ்டாலின், அண்ணாவின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கைவாரிசு தான் என்றும் கூறினார். மேலும், ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை மற்றும் திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது என்றும், ஆளுநர் உரை ட்ரெயிலர்தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பத்தாண்டுகள் பொறுத்திருந்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும், துளி அளவும் சந்தேகம் வேண்டாம் எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே, தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்றும், திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என பலரும் ஊடகங்கள் வாயிலாக வருத்தத்தை தெரிவிக்கின்றனர் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.  திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை. யாராலும் அடக்க முடியாத யானை என அவர் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி