இன்னொரு உயிரை எடுக்க நினைத்தால் இதுதான் கதி.. ஆம்புலன்சில் துடி துடித்து உயிரிழந்த சிறைக் கைதி.. பரபரப்பு.

Published : Jun 24, 2021, 11:40 AM IST
இன்னொரு உயிரை எடுக்க நினைத்தால் இதுதான் கதி.. ஆம்புலன்சில் துடி துடித்து உயிரிழந்த சிறைக் கைதி.. பரபரப்பு.

சுருக்கம்

சென்னையில் பெட்ரோல் பாட்டில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் மரணம் அடைந்த நிலையில் மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

சென்னையில் பெட்ரோல் பாட்டில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் மரணம் அடைந்த நிலையில் மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். கடந்த 20 ஆம் தேதி இவர் நடுக்குப்பம் 5வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தபோது திடீரென்று அங்கு வந்த 5 நபர்கள் குமரேசன் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசி எறிந்தனர். ஆனால் பாட்டில்கள் மரத்தின் மீது பட்டதால் வெடிக்காமல் குமரேசன் உயிர் தப்பினார். 

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக குமரேசன் மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி பெட்ரோல் பாட்டில்களை வீசிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கமல் (எ) கமல்பாய்(37), ஜான்சன்(22), கார்த்திக் (23), கீதன் (23) மற்றும் அக்பர் அலி(21) என்பது தெரியவந்தது. மேலும், கஞ்சா போதையில் இருதரப்பினரிடையே உள்ள முன்விரோதத்தை மனதில் வைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுராந்தகம் கிளைச் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட கமல்பாய்-க்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக சிறைக்காவலர்கள் கமல்பாயை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து கமல் (எ) கமல்பாய்-ன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த கைதி மரணம் அடைந்ததன் காரணாமாக இச்சம்பவம் தொடர்பாக மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்த உள்ளார். மேலும், கமல் மூச்சுத் திணரல் காரணமாக உயிரிழாதாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல கோணங்களில் மதுராந்தகம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி