ஒன்றிய அரசு குறித்து கருத்துச் சொல்ல முடியாது.. நழுவிய ஆளுநர் தமிழிசை..

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2021, 11:24 AM IST
Highlights

தடுப்பூசி தான் தீர்வு என்றார். 70 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் எந்த வகை வைரஸ் வந்தாலும் பாதிப்பில்லை எனக் கூறிய அவர், டெல்டா பிளஸ் வீரியம் மிகுந்தது  வேகமாக பரவக் கூடியது என்றாலும், எந்த அலை வந்தாலும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்,  

கொரோனா மைனஸ் ஆக வேண்டும் என நினைக்கும் நிலையில் டெல்டா பிளஸ் வந்துள்ளது எது எப்படி இருந்தாலும் தடுப்பூசி தான் தீர்வு என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கவியரசு கண்ணதாசனின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநராக இருந்தாலும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில்  கவியரசு கண்ணதாசன் சிலைக்கு மரியாதை செய்ய வந்துள்ளேன்.புதுவை  பரதியாரும், பாரதிதாசனும் உலா வந்த மண், அங்கு  துணை நிலை ஆளுநராக இருப்பதில் பெருமை அடைகிறேன். அதுபோல கண்ணதாசன் வளம் வந்த தமிழ் மண்ணில் அவருக்கு  மரியததை செலுத்தியது பெருமையாக உள்ளது என்றார்.

 

மிக எளிமையான வாழ்க்கை தத்துவங்களை மக்களுக்கு எடுத்து சொன்னவர்  கண்ணதாசன் எனவும் புகழாரம் சூட்டினார். புதுவையில் நல்ல ஆட்சி அமைவதற்கான ஆரம்பமாக  வரும் 27 ஆம் தேதி 5 அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள் என்ற அவர், புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்கப்படாததால் கொரோனா கட்டுப்படுத்துவதில் சுனக்கம் இல்லை என்றும்,கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் கவனமாக செயல்பட்டு கட்டுப்படுத்தி உள்ளோம் எனவும் கூறினார்.அதற்காக சென்னை உயர்நீரிமன்றமே எங்களை பாராட்டி உள்ளது என தெரிவித்தார்.

கொரோனா மைனஸ் ஆக வேண்டும் என நினைக்கும் நிலையில் டெல்டா பிளஸ் வந்துள்ளது. எது எப்படி  இருந்தாலும், தடுப்பூசி தான் தீர்வு என்றார். 70 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் எந்த வகை வைரஸ் வந்தாலும் பாதிப்பில்லை எனக் கூறிய அவர், டெல்டா பிளஸ் 
வீரியம் மிகுந்தது  வேகமாக பரவக் கூடியது என்றாலும், எந்த அலை வந்தாலும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இவற்றை பின்பற்றினால் எந்த வித வைரஸையும் எதிர்கொள்ளலாம் என்றார்.ஒன்றிய அரசு குறித்து  கருத்து சொல்ல முடியாது என்ற அவர், அரசியல்வாதிகள் அவர் அவர் கருத்துக்களை கூறி வருவதாக தெரிவித்தார்.
 

click me!