ஆளுநர் உரை வெறும் டிரெய்லர் தான்.. சட்டமன்றத்தை அதிரவிட்ட முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகள்..!

Published : Jun 24, 2021, 11:48 AM ISTUpdated : Jun 24, 2021, 11:51 AM IST
ஆளுநர் உரை வெறும் டிரெய்லர் தான்.. சட்டமன்றத்தை அதிரவிட்ட முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகள்..!

சுருக்கம்

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும். தமிழகத்தின் மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திமுக உறுப்பினா் உதயசூரியன் முன்மொழிந்தாா். ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தீா்மானத்தின் மீது பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினாா். அதற்கு முதல்வர், அமைச்சா்கள் உள்ளிட்டோர் குறுகிட்டு பதிலளித்தனர். 

இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில்;- ''என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. நான் அண்ணாவின் அரசியல் வாரிசு; கருணாநிதியின் கொள்கை வாரிசு. ஆளுநர் உரை ட்ரெய்லர்தான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறோம் என பேசியுள்ளார். 

கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், தோழமை கட்சிகளுக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்றார். 5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதை ஆளுநர் உரையில் சொல்லி விட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்படி 75,546 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். தமிழக்ததில் உள்ள பழமையான திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும். தமிழகத்தின் மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி