யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் அன்பு வேண்டுகோள்..!

Published : Aug 23, 2021, 08:31 PM ISTUpdated : Aug 23, 2021, 08:50 PM IST
யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் அன்பு வேண்டுகோள்..!

சுருக்கம்

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போது தான் குறைந்து வரும் நிலையில் பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்த நாளன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்.

தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதியன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 2005ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போது தான் குறைந்து வரும் நிலையில் பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்த நாளன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்.

கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து பிறந்த நாளை கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன். கொரோனா குறையாத சூழலில் ஆகஸ்ட் 25ம் தேதி எனது பிறந்த நாளன்று நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கனிமொழி இடத்தை லாபி செய்யும் மருமகன்..! சபரீசனுக்கு முக்கிய பதவி..! ஸ்டாலின் அதிரடி..!
99% வாக்குறுதி நிறைவேற்றமா..? மனசாட்சியே இல்லாம பொய் பேசலாமா முதல்வரே..? விளாசும் அன்புமணி