குலை நடுங்க வைக்கும் கொடநாடு வழக்கு... விடை தெரியாத 7 மர்மங்கள்..!

By vinoth kumarFirst Published Aug 23, 2021, 8:03 PM IST
Highlights

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றிய விவாதங்கள் ஓய்ந்திருந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மீண்டும் அந்த வழக்கு தூசுதட்டப்படுகிறது.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றிய விவாதங்கள் ஓய்ந்திருந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மீண்டும் அந்த வழக்கு தூசுதட்டப்படுகிறது.

அதிர வைக்கும் 7 மர்மங்கள்

* கொடநாடு எஸ்டேட்டை பொறுத்தவரையில் தடையில்லா மின்சாரம் வழங்கும் அனுமதியை ஏற்கனவே வாங்கி வைத்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் நடந்த நாள் அன்று மின் இணைப்பு பங்களாவில் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்படி மின்சாரம் தடை படும் நேரத்தில் ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்கள் இல்லையா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

* கொடநாடு  எஸ்டேட்டில் முக்கியமான இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆப் செய்யப்பட்டுள்ளது. 

* ஏப்ரல் 23ம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் உள்ளே அந்த நள்ளிரவு நேரத்தில் 3 கார்களில் கொள்ளையர்கள் வருகின்றனர். ஒரு இன்னோவா காரில் தாம் கொள்ளையடித்த ஆவணங்களை எடுத்து கொண்டு ஓட்டுநர் கனகராஜ் அப்படியே சேலத்தில் இருக்கின்ற ஒரு முக்கிய அதிமுக புள்ளியிடம் அந்த ஆவணங்களை கொடுத்தாக தகவல் வெளியானது. மற்றொரு சான்ட்ரோ காரில் வந்தவர்கள் யார் அந்த மர்ம கார் யாருடையது என்ன ஆனது என்று தெரியவில்லை.

* ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு கொள்ளை சம்பவம் அரங்கேறுகிறது. சில நாட்களிலேயே ஏப்ரல் 28ம் தேதி கார் ஓட்டுநர் கனகராஜ் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழக்கிறார். அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கனராஜ் குடும்பத்தினர் தற்போது வரை கூறி வருகின்றனர். 

* இந்த விபத்து சம்பவம் அரங்கேறிய 24 மணிநேரத்தில் இதில் மற்றொரு குற்றவாளியான சயான் குடும்பத்தோடு விபத்தில் சிக்குகின்றனர். அந்த விபத்தில் அவருடைய மனைவியும், மகளும் உயிரிழந்தனர். இவர் இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

* கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருக்கக்கூடிய தினேஷ் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார்.

* கொடநாடு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவராக இருக்கக்கூடிய மர வியாபாரி சஜீவனுக்கு அதிமுகவில்  வர்த்தக அணியில் மிக முக்கியமான பதவியை சில நாட்களிலேயே கொடுக்கப்படுகிறது. இந்த 7 மர்மங்களும் தான் கொடநாடு விவகாரத்தில் வலுவான சந்தேகங்கை எழுப்பி கொண்டுடிருக்கிறது. 

மேலும், கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா இருந்த போதே அங்கு வலுவான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் மறைவுக்கு பிறகும் தொடர்ந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்த சம்பவத்தன்று அன்று பாதுகாப்பில் இருந்த போலீசார் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் நைட் ரவுண்ட் என் வரவில்லை இது மாதிரியாக கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது.  கொடநாடு விவகாரத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழாமல் இருப்பதாலே, இவற்றை வெளிகொண்டுவர வேண்டும் என்பதாலே ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மீண்டும் இந்த வழக்கு தூசுதட்டப்படுகிறது

click me!