மீண்டும் ஏமாற்றியது வட கிழக்கு பருவமழை…. இன்னும் 5 நாள் கழித்ததுதான் தொடங்குமாம் ?

By Selvanayagam PFirst Published Oct 26, 2018, 7:05 AM IST
Highlights

இன்று முதல் வட கிழக்கு பருமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குப் பிறகு தான் வட கிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பருவமழை துவங்க மேலும் தாமதமாகும் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.


இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை 5 நாட்களில் துவங்க வாய்ப்பு உள்ளது. இதற்கான சாதகமான சூழல், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுவாக கூறி உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் பலமான காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும்  27 ,  28 ஆகிய  தேதிகளில் மழைக்கு வாய்ப்பே  இல்லை என்றும், 29 ல் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் எனக்கூறி உள்ளது.

5 நாட்களுக்குப் பிறகு தான் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!