நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால் நீடிக்குமா எடப்பாடி அரசு? டி.டி.வி.யின் ஸ்லீப்பர் செல்கள் நிலை என்ன? அடுத்த அதிரடி !!

By Selvanayagam PFirst Published Oct 25, 2018, 8:47 PM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தற்காலிகமாக எடப்பாடி அரசு தப்பித்தாலும், சட்டமன்றத்தில் ஃப்ளோர் டெஸ்ட் நடத்தினால் இந்த அரசு நீடிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் அவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்ட நீதிபதி சதய்நாராயணன், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அழைப்பு விடுப்பாரா ?  இல்லையா ? ,நடத்தினால் அது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு சாதகமாக இருக்குமா உள்ளிட்ட பலவேறு கேள்விகள் எழுந்துள்ளன..

ஆளுநர் ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டாலும்  அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றே கூறப்படுகிறது.அதே நேரத்தில் எடப்பாடி அரசை கவிழ்க்க வேண்டும் என நினைத்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு அது படிந்து வந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

18 எம்.எல்.ஏ க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று நீதிமன்றம் கூறிவிட்டதால் 18 தொகுதிகளும் காலியாக உள்ளன. இதோடு திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் காலியாக இருக்கிறது.

எனவே சட்டசபையின் மொத்த எண்ணிக்ககையான 234 இல் 20 ஐ கழித்தால் சட்டசபையில் தற்போதைய மொத்த பலம் 214 மட்டுமே.தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாண்மையை நிரூபிக்க 108 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதுமானது. தற்போதைய பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 111 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இருக்கிறது. இதில் அறந்தாங்கி, கள்ளக்குறிச்சி  உள்ளிட்ட 3 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். கருணாஸ், தனியரசு உள்ளிட்ட 3 பேரும் யாருடைய ஆதரவு நிலை எடுக்கப் போகிறார்களோ என்ற நிலையும் உள்ளது.

எனவே ஒருவேளை ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டாலும் அதில் அரசு வெற்றி பெரும்.இன்னும் ஒரு ஆறுமாதத்துக்கு ஆளும் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ஒரு தரப்பும், இல்லை கவிழ்ந்து விடும் என்று ஒரு தரப்பும் கூறி வருகிறது. ஸ்டாலினுக்கே வெளிச்சம்.

click me!