18 + 2 !! காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத் தேர்தல் ? தேர்தல் ஆணையர் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Oct 25, 2018, 7:27 PM IST
Highlights

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல் முறையீடு செய்வதைப் பொறுத்து அந்த தொகுதிகளில்  இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம்  ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி  பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது.

இது தொடர்பாக செய்தியாளார்களிடம்  பேசிய தலைமை தேர்தல் ஆணையர் .பி.ராவத் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் காலியிடங்களை ஏற்படுத்தும் என்றும், காலி இடங்கள் ஏற்படும் போது, 6 மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந்த கண்ணோட்டத்தில் தான் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்த . ராவத், 18 பேரும் உச்சநீதிமன்றத்தில்  முறையிட வாய்ப்பு உள்ளதால், அதற்கு பிறகே முடிவு செய்யப்படும் என கூறினார்.


இதனிடையே தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் பேசும்போது நாடாளுமன்றத்  தேர்தலோடு சேர்த்து, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என கூறினார்..

18 தொகுதிகள் காலி என சட்டசபை செயலகம் கூறியபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  தேர்தல் நடத்தும் தொகுதிகளில் சட்டம் ஒழுங்கு, தேர்தல் சூழல் குறித்து ஆராயப்படும் என்றும் கூறினார்.. திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கின் நிலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும் சத்ய பிரத சாகு  கூறினார்.

click me!