ஐயோ "அரசியலே வேண்டாம் " அலறி ஓடிய நடிகர் வடிவேலு.. 2011 தேர்தல் கொடுத்த மரண அடியை மறக்காத வைகைப்புயல்

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2022, 1:21 PM IST
Highlights

அரசியலே நமக்கு தேவையில்லை, சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்யலாம் என நடிகர் வடிவேலு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகப்பெருமான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் இவ்வாறு கூறினார். 

அரசியலே நமக்கு தேவையில்லை, சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்யலாம் என நடிகர் வடிவேலு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகப்பெருமான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் இவ்வாறு கூறினார். வைகைப்புயல்... நகைச்சுவை மன்னன் என்று தமிழக மக்களால் வர்ணிக்கப்படுபவர் வைகைப்புயல் வடிவேலு.  

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்கள் வந்திருந்தாலும், வடிவேலுக்கு நிகர் வடிவேலுதான் என்ற நிலையை உருவாக்கி வைத்திருப்பவர் அவர்.  எத்தனை நகைச்சுவை கலைஞர்கள் வந்தாலும் வடிவேலு போல காமெடி, உடல் மொழியால் மக்களே வேறு எவராலும் சிரிக்க வைக்க முடியாது நிலை இருந்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி தமிழர் நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு.

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திடீரென திமுகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது நடிகர் விஜயகாந்த் உடன் ஏற்பட்ட உரசல்  காரணமாகவே அவர் அரசியலில் இறங்கினார் என்று கூறப்பட்டது. திமுக தேர்தல் பிரச்சார முழுவதும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை குறிவைத்து அவரது பிரச்சாரம் இருந்தது, பெரும்பாலும் விஜயகாந்த் மீது தொடுக்கப்படும் தனிமனித தாக்குதலாகவே அது இருந்தது.   அவர் மிகக்கடுமையாக வசித்து வந்தார் வடிவேலு. ஆனால்  வடிவேலின் இந்த விமர்சனம் பொது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

இதையும் படியுங்கள்: காவல்துறை செயல்பாட்டில் தலையிடும் திமுக எம்எல்ஏ..! ஆளும்கட்சி அராஜகம் கொடிகட்டி பறக்கிறது- ஓபிஎஸ் ஆவேசம்

வடிவேலை பொதுமக்கள் கடிந்து கொண்டனர். வடிவேலுவுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று பொதுமக்கள் வடிவேலுவை விமர்சித்து வந்தனர். ஆனால் அந்த தேர்தலில் திமுக  தோல்வியை சந்தித்தது. தேமுதிக இடம் பெற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது, அன்று முதல் சினிமாவில் உச்சத்தில் இருந்த வடிவேலுக்கு சறுக்கல் ஆரம்பித்தது, அன்று முதல் இன்று வரையிலும் அவர் தனது மொத்த மார்க்கெட்டையும் இழக்க நேரிட்டது. அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது, வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தால் அது தங்களுக்கு பாதகமாக்கி விடுமோ என பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அஞ்சினர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை வடிவேலுவுக்கு மார்கெட் காலியனது. அவரது மறைவுக்குப் பின்னரே அந்த நிலை தற்போது மாறியுள்ளது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளன, அதாவது விஜயகாந்த் என்ற ஒரு தனிப்பட்ட நடிகர்கள் மீது  இருந்த வெறுப்பு  காரணமாக அரசியலில் இறங்கி தனது சினிமா வாழ்க்கையில் சறுக்கலை ஏற்படுத்திக் கொண்ட அவரது முடிவை எண்ணி அவரே பல நேரங்களில் வேதனைப்பட்டதுண்டு. அரசியலே வேண்டாம் சாமி என்ற விரக்தியும் அவருக்கு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்ற ராமதாஸ்...! இதை மட்டும் செய்திடுங்கள் என கோரிக்கை விடுத்த பாமக

இந்நிலையில்தான் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணியன் சுவாமி திருக்கோவிலில் அவர் நேற்று மாலை, சாமி தரிசனம் செய்தார், பின்னர் அங்கு செய்தியாளர் சந்தித்தார், அப்போது பேசிய அவர்,  நாய் சேகர் ரிட்டர்ன், சந்திரமுகி 2,  உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன் என்றார். அப்போது, மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஐயோ அரசியல் நமக்கு தேவையே இல்லை, சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்யலாம், தமிழ அரசின் ஆட்சி மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றார். 
 

click me!