யார் வேட்பாளராக இருந்தாலும் ஐ டோன்ட் கேர்.. பதற்றத்தை உள்ளே வைத்துக்கொண்டு கெத்து காட்டும் அமைச்சர் கடம்பூர்.!

By vinoth kumarFirst Published Mar 12, 2021, 11:09 AM IST
Highlights

கோவில்பட்டி தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் எங்களுக்குக் கவலையில்லை. அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி, ஏன் தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் வேட்பாளரை அறிவித்தாலே எங்களுக்கு வெற்றி.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2-வது பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், தென்காசி வடக்கு மண்டல அதிமுக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவரை எதிர்த்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் போட்டியிட உள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் தெம்போடு திராணியுடன் தேர்தலை சந்திக்க வேட்பாளர் பட்டியலை முதன் முதலில் வெளியிட்டது அதிமுக தான். அதிமுகவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே தொகுதி மக்கள் மீண்டும் என்னை போட்டியிட வேண்டும் என்று கூறினர். மேலும் அதிமுகவை தான் வெற்றி பெற வைப்போம் என்று தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

மேலும், கோவில்பட்டி தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் எங்களுக்குக் கவலையில்லை. அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி, ஏன் தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் வேட்பாளரை அறிவித்தாலே எங்களுக்கு வெற்றி என்ற நிலையில்தான் களத்தில் உள்ளோம். அப்படித்தான் நானும் வந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

click me!