வேட்புமனு தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.. அரசியல் கட்சிகள் தீவிரம்..

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2021, 10:49 AM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் என 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.  

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் என 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே  உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான தீவிர பணியில் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் தொகுதி பங்கீடு செய்யும் பணியில் அதிமுக-திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வேகவேகமாக வேட்பாளர் பட்டியலையும் வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. சரியாக காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே போல் 15 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம், மனு மீதான பரிசீலனை 20ஆம் தேதி நடைபெற உள்ளது. 

அதை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 22 ஆகும், அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. வேட்புமனு விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது  நோட்டரி மூலம் ஒப்புதல் பெற்று நேரடியாகவும் அளிக்கலாம் ஆனால் ஆன்லைன் மூலம்  மனு தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ள காரணத்தினால் டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

click me!