எது நடந்தாலும் சரி தமிழகத்துக்கு நீட்தேர்வு வேண்டாம்னு அடித்து சொல்லிட்டோம்.. கெத்துகாட்டிய மா.சு.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2021, 11:55 AM IST
Highlights

தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கிட வேண்டும். கடந்த 2மாதங்களில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் அளவு குறைவாக இருந்த சூழலில் சிறப்பு தொகுப்பாக 1கோடி தடுப்பூசிகள் வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகளை தந்து ஒரு கோடி சிறப்பு தடுப்பூசிகளை வழங்கிடுமாறு கேட்டு இருக்கிறோம்.

எது நடந்தாலும் சரி தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் தெளிவாக கூறிவிட்டோம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் மா.சுப்ரமணியம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்,டெல்லியில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை சந்தித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தேவையான கட்டமைப்பை கேட்டு இருக்கிறோம். 

நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்திற்கு விலகளிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தலை தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி கூறியுள்ளோம். தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கிட வேண்டும். கடந்த 2மாதங்களில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் அளவு குறைவாக இருந்த சூழலில் சிறப்பு தொகுப்பாக 1கோடி தடுப்பூசிகள் வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகளை தந்து ஒரு கோடி சிறப்பு தடுப்பூசிகளை வழங்கிடுமாறு கேட்டு இருக்கிறோம்.

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளோம்.அதேபோல் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளோம்.  தமிழகத்தில் உள்ள 11 மருத்துவ கல்லூரியில் உடனடியாக ஆய்வு குழுவை அனுப்பி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை விரைவு படுத்திட வேண்டும். ஓவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் 150மாணவர்கள் என்ற விகிதத்தில் 1650மாணவர்கள் உடனடியாக சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கரும்பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்துகளை உடனடியாக கூடுதலாக வழங்கிடுமாறு கேட்டு இருக்கிறோம். 

நீட் தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி நடந்து கொண்டு இருக்கிறது என்று கூறினார்கள் இருந்தபோதும் தமிழகத்தில் உள்ள சூழலை நாங்கள் எடுத்து சொல்லியிருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை 13 மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்து கொண்டு இருக்கிறார்கள்.கிராமப்புறத்தில் இருக்க கூடிய மாணவர்களின் இக்கட்டான சூழலையும் இங்கு இருக்க கூடிய பாட திட்டத்தில் உள்ள வித்தியாசங்களையும் எடுத்து கூறியுள்ளோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை உறுதியாக சொல்லிவிட்டு வந்து உள்ளோம். ஏறத்தாழ 85ஆயிரம் பேர் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்கள் அதில் பெரும்பாலும் நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்தை தான் தெரிவித்துள்ளார்கள். ஏ.கே. ராஜன் அவர்கள் அளித்துள்ள அறிக்கையை தமிழக முதல்வர் சட்ட வல்லுணர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.
 

click me!