எத்தனை பேரை சுட்டுக் கொன்றாலும், பாகிஸ்தான்காரனுங்க திருந்தவே மாட்டானுங்க: எல்லையை மிதித்தால் சமாதி.

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2020, 1:19 PM IST
Highlights

சர்வதேச எல்லையை சுற்றியுள்ள பாதுகாப்பு தளங்களை தாக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது, ஆனாலும் காஷ்மீரில் கட்டுப்பாட்டு கோட்டை கடக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெற்றி பெற முடியாது என பிஎஸ்எப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்தல் முயற்சிக்கிறது எனவும், அது எல்லை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், (இந்திய எல்லை பாதுகாப்பு படை) (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது.  இந்தியாவுக்கும்  பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக  காஷ்மீர் விவகாரத்தில் மோதல் நீடித்து வருகிறது. இது நாளடைவில் பகையாக மாறி இருநாடுகளும் எதிரி நாடுகளாக உள்ளன. இந்நிலையில் மற்றொருபுறம் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறது. ஒரே நேரத்தில் இரு நாடுகளை எதிர்க்கும் சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.  இந்நிலையில் எதிரிகளை சமாளிக்க இந்தியா பாதுகாப்பு துறையை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் போர்க்காலங்களில் எதிரி நாட்டில் தாக்குதலை சமாளிக்க எஸ்-400 என்ற ஏவுகணை தடுப்பு செயல்முறையை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு துறையை பலப்படுத்துவதில் இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், எல்லையில் அடிக்கடி தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ட்ரோன் மூலம் போதைப் பொருட்களை கடத்துவதில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பி.எஸ்.எப் எச்சரித்துள்ளது அதேபோல் ஆயுதங்கள், வெடி மருந்துகள் ட்ரோன் மூலம் இந்திய எல்லைக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில் பாக் பயங்கரவாதிகள் தீவிரம் காட்டி வருவதாகவும் பி.எஸ்.எப் எச்சரித்துள்ளது. 

ஆர்.எஸ்புரா மற்றும் சம்பா துறைகளில் உள்ள ராணுவ தளங்களை தாக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக அது எச்சரித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பி.எஸ்.எப்,  ஜம்மு-காஷ்மீர் எல்லையை சுற்றி ட்ரோன்கள் மூலமாக ஊடுருவல் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. சர்வதேச எல்லையை சுற்றியுள்ள பாதுகாப்பு தளங்களை தாக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது, ஆனாலும் காஷ்மீரில் கட்டுப்பாட்டு கோட்டை கடக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெற்றி பெற முடியாது என பிஎஸ்எப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  கடந்த சனிக்கிழமை பஞ்சாப் எல்லையை ஒட்டியுள்ள தரன் தரன் எல்லைப்பகுதியில் 5 தீவிரவாதிகள் போதைப் பொருட்களுடன் ஊடுருவ முயற்சித்த போது பி.எஸ்.எப் வீரர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர், அப்போது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவே, பி.எஸ்.எப் கொடுத்த  பதிலடியில் 4 பேரும் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏகே-47 துப்பாக்கி,  4 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தற்போது அடிக்கடி பஞ்சாப்பை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் அதிக உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் தென்படுவதாகவும், எல்லை பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

click me!