ரவுடியை துடிக்க துடிக்க என்கவுண்டர் செய்த விவகாரம்..!! 4 காவலர்கள் அதிரடியாக பணியிடமாற்றம்...!!

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2020, 12:36 PM IST
Highlights

அப்போது செய்தியாளர்களிடன் பேசிய காவல் ஆணையர்,  சென்னை அயனாவரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான சங்கர் மீது 3 கொலை வழக்குகள்,4 கொலை முயற்சி உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ஏற்கெனவே சங்கர் 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறினார்

கடந்த 21ஆம் தேதி அயனாவரத்தில் நடந்த என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய நான்கு போலீசார்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க காவல்துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை அயனாவரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான ரவுடி சங்கர் கடந்த 21 ஆம் தேதி நியூ ஆவடி சாலையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் 4 காவலர்கள் சங்கரை கைது செய்ய சென்றனர். அப்போது காவலர்கள்  கைது செய்ய முற்படும் போது ரவுடி சங்கர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் காவலர் முபாரக்கை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் தற்காப்புக்காக ஆய்வாளர் நடராஜ் ரவுடி சங்கரை 3 முறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சங்கரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர் முபராக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் காயமடைந்த காவலர் முபராக்கை காவல் ஆணையர் மகேஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடன் பேசிய காவல் ஆணையர்,  சென்னை அயனாவரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான சங்கர் மீது 3 கொலை வழக்குகள்,4 கொலை முயற்சி உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ஏற்கெனவே சங்கர் 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறினார். ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இது மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் சிபிசிஐடி விசாரிக்க  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நான்கு காவலர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல் நிலை காவலர் முபாரக், தலைமை காவலர் ஜெயபிரகாஷ், வடிவேலு, காவலர் காமேஷ் பாபு ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேரும் சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, டி.பி சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!