கோடை காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். நாளொன்றிற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி மின் உற்பத்திக்கு தேவைப்படுகிறது,
அண்ணாமலை வேலை வெட்டி இல்லாதவர் அவரைப் பற்றி பேசுவதில் பலன் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டமாக கூறியுள்ளார். அவரைப்போல பலரும் தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள ஆதாரமில்லாமல் பேசி வருவகின்றனர். அப்படிப்பட்டவர்களை பொருட்படுத்த தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
திமுக ஆட்சி அமைத்தது முதல் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசையும் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, தேர்தலுக்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் விமர்சித்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.
துணிவிருந்தால் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை ஆதாரங்களை வெளியிட வேண்டுமென செந்தில்பாலாஜி பலமுறை கேட்டும் அண்ணாமலை ஆதாரங்களை வெளியிடவில்லை. ஆனாலும் அவரது குற்றச்சாட்டுகள் தொடர்கிறது. இந்நிலையில்தான் செய்தியாளர்கள் அண்ணாமலை குறித்து எழுப்பிய கேள்விக்கு, அவளை பற்றி பேசுவதில் பலன் இல்லை என காட்டமாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
undefined
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் தொடர்ந்து மின்வாரிய துறையுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வட்டி குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மூலம் தமிழக மின்சார வாரியத்திற்கு 2,200 கோடி அளவு சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. செலவைக் குறைக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 98% விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு இரு தினங்களில் மின்னிணைப்பு வழங்கப்பட்டுவிடும்.
கோடை காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். நாளொன்றிற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி மின் உற்பத்திக்கு தேவைப்படுகிறது, ஆனால் மத்திய அரசு 50 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே தருகிறது. முதற்கட்டமாக 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. நிலக்கரி விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில் வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலைய பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து உற்பத்தி தொடங்கும் என்றார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல் இருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டுகிறாரே எனத செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அண்ணாமலை வேலை வெட்டி இல்லாதவர், தன் இருப்பைக் காட்டிக்கொள்ள எதையாவது ஒன்றை பேசிவருகிறார், வேலை இல்லாதவர்களின் பற்றியோ, ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகிறவர்களைப் பற்றியோ பேச வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார். இன்னும் சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் வார இதழ்கள் மூலம் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்றார்.