இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் வேண்டாம்... ஒன்லி லோக்கல் பாலிடிக்ஸ்... நச்சென அடித்த அமைச்சர் கே.என்.நேரு..!

By Thiraviaraj RMFirst Published Aug 6, 2021, 2:50 PM IST
Highlights

இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க. ஒன்லி திருச்சி பாலிடிக்ஸ் மட்டும் கேளுங்க என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க. ஒன்லி திருச்சி பாலிடிக்ஸ் மட்டும் கேளுங்க என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

 

தமிழக பாஜகவை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்களை தொழில் ரீதியாக முடக்க நேரிடும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கே.என்.நேருவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தி.மு.க வினர் எதிர்ப்பை சமாளிக்கும் வலுவோடு தான் இருப்பார்கள். தி.மு.க சந்திக்காத எதிர்ப்பா? எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் தி.மு.க. அண்ணாமலை புதிதாக பா.ஜ.க வின் தலைவராகி இருக்கிறார். அதனால், அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இது போன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேகதாது அணை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க. ஒன்லி திருச்சி பாலிடிக்ஸ் மட்டும் கேளுங்க. இந்திய அளவில் இருக்கிறதை முதலமைச்சர் சொல்ல வேண்டும். நான் இந்த தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ., ஒரு மந்திரி. நான் இந்த தொகுதிக்காக வேலை செய்ய வந்திருகிறேன்’’ என்றார். முதன்மை செயலாளர் என்பதால் உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்டோம் என்கிறார் செய்தியாளர். அதற்கு பதிலளித்த அவர், ’’எனக்கு மேல் மூன்று பேர் இருக்கிறார்கள்’’ என அவர் பதிலளித்தார்

click me!