தமிழருக்கே உரிய பன்பை தவறாமல் செய்தார் ஸ்டாலின்.. முதல்வரை மனம் திறந்து பாராட்டிய அதிமுக ஜெயக்குமார்.

Published : Aug 06, 2021, 01:43 PM IST
தமிழருக்கே உரிய பன்பை தவறாமல் செய்தார் ஸ்டாலின்.. முதல்வரை மனம் திறந்து பாராட்டிய அதிமுக ஜெயக்குமார்.

சுருக்கம்

தமிழருக்கே உரிய பண்பாட்டின் படி முதல்வர் நடந்து கொண்டுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.   

தமிழருக்கே உரிய பண்பாட்டின் படி முதல்வர் நடந்து கொண்டுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். 

அதிமுகவின் மூத்த முன்னோடியும், அக்கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன்(82) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார், அவரது மறைவு அக்கட்சி தொடர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ். பி வேலுமணி உள்ளிட்டோர் அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 

மதுசூதனன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்த வந்த முதல்வரை வரவேற்று நெகிழ்ந்தனர். உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார். பின்னர் அதிமுக தலைவர்கள் அமர்ந்திருந்த வரிசையில் இபிஎஸ்- ஓபிஎஸ்க்கு இடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த ஸ்டாலின், துக்கம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

இந்த காட்சி அங்கிருந்தவர்கள் மத்தியில் இந்த நெகழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. நேரெதிர் துருவங்களாக ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து பரஸ்பரம் துயரத்தை பரிமாறிக் கொண்டதை  பலரும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம்நெகிழ்ந்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:- அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒன்றாக இருந்தவர் அண்ணன் மதுசூதனன், வட சென்னையில் கட்சியை வளர்த்தவர் அண்ணன் மதுசூதனன், 
60 ஆண்டு காலமாக முழுநேர அரசியல்வாதியாக இருந்தவர், அதிமுகவின் வளர்ச்சியை நோக்கியே அவருடைய சிந்தனையும் செயல்பாடு இருந்த்து. 

அவரது மறைவு அதிமுகவிற்கு மிகப்பெரிய இழப்பு, மாபெரும் தூண் மறைந்து விட்டது, இது ஒவ்வொரு தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை கழக நிர்வாகிகள் உட்பட கட்சி சார்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர். தமிழருக்கே உரிய பண்பாடு நல்லது கெட்டதில் பாகுபாடு காட்டாமல் கலந்து கொள்ளுவதுதான். அதனடிப்படையில் முதல்வர் அவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!