போராடிய ஆசிரியர்களுக்கு தேர்தலில் ஆப்பு... அதிரடியாய் திட்டம் போட்ட ஆளும் தரப்பு..!

By Selvanayagam PFirst Published Feb 5, 2019, 9:56 PM IST
Highlights

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், களப்பணியாளர்கள், தீவிர ஆதரவாளர்கள் யார், யார் எனக் கணக்கெடுக்கும் பணிளை மாநில அரசு  முடுக்கி விட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் இடைத் தேர்தலில்  வாக்குசாவடிகளில் அவர்களை தவிர்க்கவே இந்த கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகல் வெளியாகியுள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தமிழக அரசு எந்தவித சமரசத்துக்கும் வராமல் போராட்டத்தை ஒடுக்கியது. இதனால் அரசு ஊழியர்களும், சூசிரியர்களும்  தமிழக அரசு மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது


தேர்தல் நெருங்கி வரும் வேளையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கோபத்தில் இருப்பதால் அவர்கள் தேர்தலில் உள்ளடி வேலைகள் பார்க்கலாம் என ஆளும் கட்சி சந்தேகிக்கிறது.

இதனால், அவர்களுக்கு தேர்தலில் வாக்குசாவடி அதிகாரியாக பணி தரக்கூடாது என்றும்,  போராட்டத்தில் பங்கேற்காத மற்றவர்களுக்கு மட்டுமே அந்தப் பணியை கொடுக்க வேண்டும் எனவும்  சில அமைச்சர்கள் ஐடியா கொடுத்து வருகிறார்கள்.

இதையடுத்து தற்போது போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை உளவுத்துறை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தின்போது கைதானவர்கள், நோட்டீஸ் பெற்றவர்களை தேர்தல் பணிகளுக்கு  நியமிக்கக்கவே கூடாது என்று ஆளுங்கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கையும் வைக்க இருக்கிறார்கள்.
 
இதனை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பது தெரியவில்லை. இதனை மனதில் வைத்தே இன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.


 
அதில் 22- முதல் 30ம் தேதி வரை பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்து இருந்தார்.

தேர்தல் பணிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நிராகரிக்கப்போவதாக ஆளும் தரப்பு எடுத்த முடிவு எப்படியோ வெளியில் கசிந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களையும் சென்றைடைய அவர்களும் பயங்கர ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

click me!