திருநாவுக்கரசருக்கு புதிய பதவி…. ராகுல் காந்தி அதிரடி !!

By Selvanayagam PFirst Published Feb 5, 2019, 9:28 PM IST
Highlights

வரும் ஏப்ரல், மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 35 பேர் கொண்ட தமிழக தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கடந்த திடீரென மாற்றப்பட்டு முன்னாள் எம்.பி.யும், சிதம்பரத்தின் ஆதரவளாருமான கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டார்.

திருநாவுக்கரசருக்கு  எதிராக சிதம்பரம், இவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் தொடர்ந்து புகார் கூறி வந்ததால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது.  இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக  கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. 

இக்குழுவில் முனனாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர் மற்றும் , குஷ்பு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதே போல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முனனாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 35 பேர் கொண்ட தேர்தல் பிரசார குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்  35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு குழுவுக்கு பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் கமிட்டி தெரிவ்ததுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!