பதவியை இழக்கிறாரா நெல்லை மேயர்? நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நாள் குறிப்பு.!

By vinoth kumar  |  First Published Dec 30, 2023, 6:36 AM IST

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். 


ஆளுங்கட்சியை சேர்ந்த நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் ஜனவரி 12ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். இந்நிலையில், ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர மேயர் மற்றும் கவுன்சிலர்களை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் எச்சரித்திருந்தார். ஆனாலும் அமைச்சர் பேச்சை மீறி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- கோபப்பட்டாலும் கோல்டு சார் அவரு.! தன்னை தரக்குறைவாக விமர்சித்தும் வடிவேலுக்காக கேப்டன் செய்த நெகிழ்ச்சி செயல்!

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் தாக்ரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையரிடம் மனு அளித்தனர். இதனால், நெல்லை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 12ம் தேதி நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார். ஆளுங்கட்சி மேயர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதன்முறையாகும். 

click me!