விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், தீவுத்திடம் ஏற்பாடுகள் செலவுகளை ஏற்றது தமிழக அரசு! 200 பேருக்கு மட்டுமே அனுமதி.!

By vinoth kumar  |  First Published Dec 29, 2023, 2:27 PM IST

இன்னும் சிறிது நேரத்தில் தீவுத் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டுவரப்படுகிறது.


மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், தீவுத்திடம் ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். அவரது மறைவையடுத்து சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். 

Tap to resize

Latest Videos

இதனையடுத்து அவரது உடல் சென்னை தீவுத்திடலில் இன்று காலை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இன்னும் சிறிது நேரத்தில் தீவுத் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.45 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டுவரப்படுகிறது. பின்னர் 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஆனால், விஜயகாந்த் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எல்இடி திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க ஒலிபெருக்கி மூலம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர். 

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், தீவுத்திடம் ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது அரசு மரியாதை என்றால் செலவுகள் எல்லாம் அரசு ஏற்றுக் கொள்வது வழக்கமாக நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!