தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே அரசியல் களத்தில் பெரும்பாலான காலத்தில் விஜயகாந்திற்கும் எண் 5க்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ராசியான எண்ணாகவே விஜயகாந்த் 5 ஆம் எண்ணை பெரும்பாலும் தேர்வு செய்வார்.
அரசியலில் கலக்கிய விஜயகாந்த்
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நபர், கருணாநிதி- ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில் அவர்களுக்கு எதிராக களம் இறங்கியவர் விஜயகாந்த். பொதுமக்களோடும், தெய்வத்தோடு மட்டுமே என முழக்கத்தோடு அரசியல் களத்தில் இறங்கி கலக்கினார். ஒற்றை ஆளாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த விஜயகாந்த் அடுத்த 5 வருடத்தில் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தார். ஜெயலலிதாவிற்கு எதிராக பேச அரசியல் பெரும் தலைவர்களே தயங்கி நிலையில், சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்பாகவே கர்ஜித்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் ராசியான எண்?
இந்த உலகத்தை விட்டு விஜயகாந்த் மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்ட விஜயகாந்த் பிடித்த மற்றும் ராசியான எண் 5. கட்சி தொடங்கியதில் இருந்து கடைசியாக பங்கேற்ற பொதுக்குழு வரை அணைத்தின் கூட்டுத்தொகை 5 ஆகவே இருந்துள்ளது.
* 2005 ல் தே மு தி க கட்சியை தொடங்கிய தினம் செப்டம்பர் 14. அதன் கூட்டுத்தொகையும் 5
* 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தே மு தி க போட்டியிட்ட இடங்கள் 41. அதன் கூட்டுத்தொகையும் 5
* 2014 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே மு தி க போட்டியிட்ட இடங்கள் 14. அதன் கூட்டுத்தொகையும் 5.
* 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தே மு தி க தான் பெரிய கட்சி. அந்த தேர்தலில் தே மு தி க போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை 104. அதன் கூட்டுத்தொகையும் 5 தான்.
* விஜயகாந்த் மக்கள் முன் இறுதியாக தோன்றிய தினம் டிசம்பர் 14 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம் . அந்த தேதியின் கூட்டுத்தொகையும் 5 தான். இப்படி பல நேரங்களில் விஜயகாந்துக்கு 5 ஆம் எண் தான் ராசியான எண்ணாக இருந்துள்ளது. இதற்கு அவரது பிறந்த தேதியான 25/08/1952 கூட்டுத்தொகை 5 ஆக உள்ளது. ஒருவேளை அதனாலேயே அவரது ராசியான எண் 5 ஆக இருக்கக்கூடும் என தகவல் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்