வன்னியர் வாக்கு மீது நம்பிக்கை இல்லை... திமுக முக்கிய நிர்வாகிக்காக பதுங்கும் பாமக..!

Published : Feb 03, 2021, 04:57 PM IST
வன்னியர் வாக்கு மீது நம்பிக்கை இல்லை... திமுக முக்கிய நிர்வாகிக்காக பதுங்கும் பாமக..!

சுருக்கம்

அவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ம.க., தரப்பு தற்போது பின்வாங்கியுள்ளது. 

சேலம், வீரபாண்டி தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில், இங்கே தனியாக போட்டியிட்ட பா.ம.க., 17 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது.

 

அதனால், அ.தி.மு.க.,விடம் இந்த முறை இந்த தொகுதியை கேட்டு வாங்குவதில் தீவிரமாக இருந்தது பாமக. எதிர் தரப்பில், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுக்கு தொகுதியை ஒதுக்கப் போவதாக தகவல் கிடைத்தது. அவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ம.க., தரப்பு தற்போது பின்வாங்கியுள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் வேறொரு தொகுதியை கேட்க முடிவு செய்திருக்கிறது பாமக தரப்பு. ஆக மொத்தத்தில் தங்களது வேட்பாளரை நிறுத்தினால் தோல்வி உறுதி என நினைத்து அதிமுகவே அதனை பார்த்துக் கொள்ளட்டும் என எஸ்கேப் ஆகிறது பாமக. 

PREV
click me!

Recommended Stories

ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு
சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!