மதக் கலவரம் செய்ய திட்டமிடுபவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடக்கூடாது... கொதிக்கும் எல்.முருகன்..!

Published : Feb 03, 2021, 03:48 PM IST
மதக் கலவரம் செய்ய திட்டமிடுபவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடக்கூடாது... கொதிக்கும் எல்.முருகன்..!

சுருக்கம்

மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். 

மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். 

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல். முருகன்;- தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நலன் கருதி, மாநிலத்துக்கு அதிக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்றவை பட்ஜெட்டில் தரப்பட்டுள்ளதாகவும், இதை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை என்று குற்றம்சாட்டினார். 

மேலும், எந்த மதத்தையும், தனி நபரையும் கொச்சைப்படுத்தக் கூடாது. பாஜக எந்த மதத்துக்கும் எதிரான கட்சி அல்ல என்றும், மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சசிகலா வந்தால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு எல்.முருகன், சசிகலா தமிழ்நாடு வந்த உடன் பார்க்கலாம் என்று கூறினார். 

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!