பெட்ரோல், டீசல் விலை பத்தி…? நோ கமெண்ட்ஸ்… வாய் திறக்க மறுத்த பெட்ரோலிய அமைச்சர்

By manimegalai aFirst Published Oct 17, 2021, 7:38 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எதுவும் பேச போவது இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரே கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எதுவும் பேச போவது இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரே கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல்,டீசல் விலை எங்கோ போய் கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து அதிர்ச்சி அளித்து வருகிறது. டீசல் விலையும் குறைந்தபாடில்லை. இந்த மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கிறது.

இந் நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேட்கும் போது நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்து உள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: கொரோனா பாதிப்பு முன்பு இருந்த நிலையை இப்போது இருக்கும் விலையோடு அதிகரித்துள்ளது. ஆனால் நாளுக்கு நாள் விலை உயருகிறது, அதை பற்றி பேசவோ, எந்த கருத்தோ தெரிவிக்க போவதில்லை என்றார்.

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை எங்கோ சென்று கொண்டிருக்க விலை உயர்வை பற்றி பேசமாட்டேன் என்று அந்த துறையின் அமைச்சரே கூறியிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

click me!