ஆயிரம் சசிகலா வந்தாலும்… ம்ஹூம்... அசைக்க முடியாது… பொளந்து கட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்..

By manimegalai a  |  First Published Oct 17, 2021, 7:10 PM IST

ஒரு சசிகலா அல்ல… ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒண்ணும் பண்ண முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக பேசி இருக்கிறார்.


விழுப்புரம்: ஒரு சசிகலா அல்ல… ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒண்ணும் பண்ண முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு என்பதால் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பெருத்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். சென்னையில் ஓபிஎஸ், இபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியேற்றினர். தமிழகம் எங்கும் அதிமுகவின் கொண்டாட்டங்கள் களை கட்டின.

இந் நிலையில் விழுப்புரத்தில் அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் பொன்விழா கொண்டாடப்பட்டது. அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: அதிமுகவில் பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்களே காணாமல் போனார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் போன இயக்கம் அதிமுக.

ஆகவே தொண்டர்களுக்கு மீண்டும் சொல்கிறேன், நிஜமாக இருந்தவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. நிழலாக இருந்த சசிகலாவில் ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு சசிகலா அல்ல…. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் பண்ண முடியாது. தீயசக்திகள் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோராலும் ஒண்ணும் பண்ண முடியவில்லை என்று பேசினார்.

click me!