அதிமுகவை வாழ்த்தி… அப்படியே எம்ஜிஆர், ஜெ.வை ‘டச்’ செய்த அண்ணாமலை…

Published : Oct 17, 2021, 06:40 PM ISTUpdated : Oct 17, 2021, 06:41 PM IST
அதிமுகவை வாழ்த்தி… அப்படியே எம்ஜிஆர், ஜெ.வை ‘டச்’ செய்த அண்ணாமலை…

சுருக்கம்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு அக்கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக பொன்விழாவை முன்னிட்டு அக்கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்களில் இன்று நாள் முழுவதும் அதிமுகவினர் ஈடுபட்டு இருந்தனர். சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் ஏற்றினர்.

பின்னர் விழா சிறப்பு மலரை வெளியிட அனைவரும் அதனை பெற்றுக் கொண்டனர். இந் நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிமுவின் பொன்விழா கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பொன்மனச் செம்மல் உருவாக்கிய அதிமுக பொன்விழாவை தொடங்கும் நாள் இன்று. தொண்டர்கள் பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் நம்பி 1972ல் தொடக்கம், 1997-ல் நெல்லையில் புரட்சித்தலைவி அமைத்த வெள்ளி விழா.

சிறப்பு அழைப்பாளராக @BJP4India தேசியத் தலைவர் எல்.கே.அத்வானி அய்யா அவர்கள்! அந்த இரு தலைவர்களின் இருக்கும் பிம்பங்களாக @EPSTamilNadu @OfficeOfOPS இருவரும் கண்களைப் போல கழகத்தை காக்க, பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க என @BJP4TamilNadu  சார்பில் வாழ்த்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!