வெள்ளி விழாவில் சாதித்தது போல பொன்விழாவில் சாதிக்குமா அதிமுக? மைத்ரேயன் போட்ட பதிவால் சலசலப்பு.!

By vinoth kumarFirst Published Oct 17, 2021, 3:51 PM IST
Highlights

அதிமுகவுக்கு பொன்விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. இதற்குமுன்பு 1997-ல் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, 1998 ஜனவரி 1,2,3-ம் தேதிகளில் திருநெல்வேலியில் ஜெயலலிதா தலைமையில் வெள்ளி விழா மாநாடு நடந்தது. அப்போது நான்பாஜக மாநில துணைத் தலைவர்.

வெள்ளி விழாவில் சாதித்தது போல, பொன் விழாவில் அதிமுக சாதிக்குமா என அக்கட்சியின் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அவரது முகநூல் பக்கத்தில்;- அதிமுகவுக்கு பொன்விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. இதற்குமுன்பு 1997-ல் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, 1998 ஜனவரி 1,2,3-ம் தேதிகளில் திருநெல்வேலியில் ஜெயலலிதா தலைமையில் வெள்ளி விழா மாநாடு நடந்தது. அப்போது நான்பாஜக மாநில துணைத் தலைவர்.

மாநாட்டின் 3-ம் நாளில் பாஜகதேசியத் தலைவர் எல்.கே.அத்வானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் அவரோடு கே.என்.லட்சுமணன், இல.கணேசன் ஆகியோருடன் நானும் வந்தேன். விழா மேடையில் முதல் வரிசையில் தலைவர்களோடு அமரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மாநாட்டில் அத்வானி பேசும்போது, திராவிட இயக்க வரலாற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி எடுத்துக் கூறினார். அவர், ‘‘திராவிடர் கழகத்தில் இருந்து திமுக பிறந்தது. திமுகவில் இருந்து அதிமுக உருவானது. மறைந்த எம்ஜிஆர் அதிமுகவின் முன் ‘அஇ’ என்ற 2 எழுத்துகளை சேர்த்து கட்சிக்கு தேசிய முக்கியத்துவம் அளித்தார்’’ என்றார்.

அந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணியின் வெள்ளோட்டமாக அந்த மாநாடு அமைந்தது. கடந்த 1998 மக்களவை தேர்தலை ஜெயலலிதா தலைமையில் சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை வென்று வரலாறு படைத்தது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் அதிமுக சார்பில் 4 பேர்அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். வெள்ளி விழா வெற்றி வரலாறு படைத்தது. பொன்விழா? அப்படி என்ன வரலாறு படைக்கப்போகிறது என்ற அர்த்தத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!