புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சசிகலா அப்படி என்ன புரட்சி செய்தார்? ஜெயக்குமார் விளாசல்.!

By vinoth kumarFirst Published Oct 17, 2021, 3:26 PM IST
Highlights

வானத்திலிருந்து குதித்த அவதாரம் போல நான் தான் புரட்சித்தாய் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும். ஜெயலலிதாவைத் தவிர யாரும் புரட்சியை சொந்தம் கொண்டாட முடியாது. அவர் கட்சிக்கு எந்த புரட்சியும் செய்யவில்லை. ஒருகாலும் சசிகலாவை யாரும் ஏற்கமாட்டார்கள். 

கல்வெட்டு பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகர் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதனையடுத்து, எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி, அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- சசிகலா தன்னை கழக பொது செயலாளர் என்று எந்த தார்மீக அடிப்படையிலும், சட்டபடியாகவும் அறிவித்துக்கொள்ள முடியாது. இது தேர்தல் ஆணையத்திற்கு எதிரானது. இதற்கு கட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். மீசை வைத்தவர்கள் கட்டபொம்மன் ஆகி விட முடியுமா? கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளர் ஆகி விடுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பெங்களூர் சிறையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து மரியாதை ஏன் செலுத்தவில்லை. பொன்விழா ஒற்றுமையுடன் கொண்டாடப்படுவது அவருக்கு பிடிக்கவில்லை. சசிகலாவால் தான் 1996ம் ஆண்டு அதிமுக தோல்வியடைந்தது. வானத்திலிருந்து குதித்த அவதாரம் போல நான் தான் புரட்சித்தாய் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும். ஜெயலலிதாவைத் தவிர யாரும் புரட்சியை சொந்தம் கொண்டாட முடியாது. அவர் கட்சிக்கு எந்த புரட்சியும் செய்யவில்லை. ஒருகாலும் சசிகலாவை யாரும் ஏற்கமாட்டார்கள். ஜெயலலிதா மட்டும்தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என  ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!