அமைச்சர் அன்பில் மகேஸுக்கு கொலை மிரட்டல்.. KN.நேருவின் முன்னாள் தீவிர ஆதரவாளர் அதிரடி கைது..!

Published : Oct 17, 2021, 12:38 PM IST
அமைச்சர் அன்பில் மகேஸுக்கு கொலை மிரட்டல்.. KN.நேருவின் முன்னாள் தீவிர ஆதரவாளர் அதிரடி கைது..!

சுருக்கம்

திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனி பாரத் நகரைச் சேர்ந்தவர் நவல்பட்டு விஜி (எ) விஜயகுமார். கடந்த 2018-ல் ஆண்டு திருவெறும்பூர் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த நவல்பட்டு விஜிக்கும், அத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த தற்போது அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனி பாரத் நகரைச் சேர்ந்தவர் நவல்பட்டு விஜி (எ) விஜயகுமார். கடந்த 2018-ல் ஆண்டு திருவெறும்பூர் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த நவல்பட்டு விஜிக்கும், அத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த தற்போது அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து,  ஒன்றியச் செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நவல்பட்டு விஜி அதிரடியாக நீக்கப்பட்டார். 

தனது பதவி பறிப்புக்கு காரணமாக இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக கொலை மிரட்டல் மற்றும் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாரியப்பன் என்பவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விஜி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே, முன்ஜாமீன் கோரி நவல்பட்டு விஜி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நவல்பட்டு விஜி, இதற்கு முன்பு திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!