கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி பில்டப் செய்யும் EPS, OPS.. பங்கம் செய்யும் திமுக கூட்டணி கட்சி.!

By vinoth kumarFirst Published Oct 17, 2021, 11:33 AM IST
Highlights

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகிறது. விட்டால் நாட்டையே விற்பனை செய்துவிடும்.

விவசாய சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என மோடி அரசுக்கு முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன்;- தமிழக அரசு நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது பாராட்டிக்குரியது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது.

எதிர்காலத்திலும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் இந்த வெற்றியை அளித்துள்ளனர். அரசியல்வாதிகளுக்கு வெற்றியை கொண்டாடவும், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லாமல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என பேசி வருகின்றனர். 

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகிறது. விட்டால் நாட்டையே விற்பனை செய்துவிடும். விவசாய சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!