முதல்வர் குறித்து அவதூறு.. நள்ளிரவில் வீடு புகுந்து பாஜக முக்கிய பிரமுகரை அலேக்கா தூக்கிய போலீஸ்..!

By vinoth kumarFirst Published Oct 17, 2021, 10:59 AM IST
Highlights

பாஜக பிரமுகரான கல்யாணராமன் சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில்  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களை சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

முதல்வர் மு.க ஸ்டாலின் , முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட  பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக பிரமுகரான கல்யாணராமன் சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில்  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களை சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதுபோல திரைப்பட நடிகை மருத்துவர் ஷர்மிளாவை ஆபாசமான முறையில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க;- தனியாக செல்லும் பெண்களின் அழகான, எடுப்பான மார்பகங்களை தொடும் இளைஞர்.. 100 பேரிடம் சில்மிஷம் செய்தது அம்பலம்.!

அந்த வகையில் திமுகவின் தர்மபுரி எம்.பி. செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர், மருத்தவர் ஷர்மிளாவை ஆபாசமாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவரை உடனே கைது செய்யவேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, புகார் அளிக்கப்பட்ட 10 மணிநேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை வளசரவாக்கம் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. எதுக்கு முதல்வருக்கு நன்றி.. அண்ணாமலை மீது கடுப்பான எஸ்.ஆர்.சேகர்?

ஏற்கனவே இஸ்லாமிய மதம் குறித்து அவதூறு பரப்பியதாக கடந்த ஜனவரி மாதம் கைதான கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து,  சென்னை உயர்நீதிமன்றம்  கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

click me!