ஓபிஎஸ் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா? அதிமுக கொடி கம்பத்தில் செருப்பு..!

Published : Oct 17, 2021, 10:27 AM IST
ஓபிஎஸ் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா? அதிமுக கொடி கம்பத்தில் செருப்பு..!

சுருக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடி கம்பம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் கட்சி கொடி கம்பத்தில் செருப்பு கட்டப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

தேனி அருகே அதிமுக கொடி கம்பத்தில்  செருப்பு ஏற்றி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடி கம்பம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் கட்சி கொடி கம்பத்தில் செருப்பு கட்டப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுகவினர் இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொடிக்கம்பத்தில் இருந்து செருப்பை அகற்றினர். மேலும் அதிமுகவினர் புதிய கொடியை ஏற்றி வைத்தனர்.

அதிமுக கொடியை அவமதித்த மர்மநபர்களை கண்டுபிடித்து கைது செய்யும்படி போலீசாரிடம் அதிமுகவினர் வலியுறுத்தினர்.. அதிமுக 50வது ஆண்டுவிழா கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடியில் செருப்புகளை ஏற்றி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒருங்கிணைப்பாளரின் சொந்த மாவட்டத்திலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!