ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு.. அதிமுக கனவில் மண்ணை வாரி போட்ட பாமக..!

By vinoth kumarFirst Published Oct 17, 2021, 12:04 PM IST
Highlights

இனி ஆதாயத்துக்காக யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சி விட்டு கட்சி தாவுவோர் இப்போதே சென்றுவிடுங்கள் என ஆவேசமாக கூறினார்.கட்சியில் இருந்துகொண்டே யாரும் துரோகம் செய்யாதீர்கள். இனி போட்டி, பொறாமை இருக்கக்கூடாது. இனி கட்சிக்கு என ஒரு உளவுப்படை வைக்க போகிறோம். 

இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது. கடைசிநேரத்தில் முடிவு மாறும் நிலை இனி இருக்காது. இதற்கு கட்சியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம், ஆன்லைன் மூலமாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகம்-புதுச்சேரியை சேர்ந்த மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்;- ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. நாம் எவ்வளவு பலமான கட்சி தெரியுமா? இப்போது அந்த பலமெல்லாம் எங்கே போனது? எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே? வேதனை தெரிவித்தார். 

மேலும், எனவே இனி ஆதாயத்துக்காக யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சி விட்டு கட்சி தாவுவோர் இப்போதே சென்றுவிடுங்கள் என ஆவேசமாக கூறினார். கட்சியில் இருந்துகொண்டே யாரும் துரோகம் செய்யாதீர்கள். இனி போட்டி, பொறாமை இருக்கக்கூடாது. இனி கட்சிக்கு என ஒரு உளவுப்படை வைக்க போகிறோம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பல நேரங்களில் நாம் உதவியிருக்கிறோம். ஒரு கட்சி நம்மை களங்கப்படுத்தியது. இன்னொரு கட்சி நம்மை கொஞ்சம் கவுரவப்படுத்தியது. ஆனால் சூழ்நிலைக்கு நாம் உண்மையாக இருந்திருக்கிறோம்.

இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது. கடைசிநேரத்தில் முடிவு மாறும் நிலை இனி இருக்காது. இதற்கு கட்சியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும். வீடு வீடாக சென்று பா.ம.க.வின் பெருமைகளை, செயல்திட்டங்களை சொல்லுங்கள். தீபாவளிக்கு பிறகு பா.ம.க. நிர்வாகிகள் ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம் என தெரிவித்தார். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டதே அதிமுக அதிர்ச்சியில் இருந்த நிலையில் பாமகவின் இந்த முடிவு ஓபிஎஸ்,  இபிஎஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!