
முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கலைக்க நினைத்தவர்கள், அது முடியாததால் பித்து பிடித்தவர்களைப் போல புலம்பிக் கொண்டிருப்பதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய பன்னீர்செல்வம், அழுது புரண்டாலும் ஆட்சியை அசைக்க முடியாது என தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்கவேண்டும் என சிலர் கனவு கண்டனர். ஆனால் ஆட்சியை கலைக்க முடியாததால் தற்போது பித்து பிடித்தவர்களைப் போல புலம்பிக் கொண்டிருக்கின்றனர். அழுது புரண்டாலும் சித்து வேலைகள் செய்தாலும் மக்களின் ஆதரவு இருக்கும் இந்த ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என பன்னீர்செல்வம் பேசினார்.